News April 9, 2024
Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ரயில் பெட்டித் தொழிற்சாலையில் நிரப்பப்படவுள்ள 550 Technical Apprentices பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Fitter, Welder, Machinist, Painter, Carpenter உள்ளிட்ட பிரிவுகளில் Apprentices ஆக பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: ITI. வயது வரம்பு: 15- 24. தேர்வு: Merit List முறை. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News August 12, 2025
தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களை அறிவித்த TNSTC

சுதந்திர தினம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 1,320 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூருக்கு 190 பஸ்களும், அதேபோல் 17-ம் தேதி சென்னைக்கு திரும்ப 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன. <
News August 12, 2025
மொபைலை கொஞ்சம் கீழ வையுங்க!

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?
News August 12, 2025
சைபர் கிரிமினல்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

சைபர் கிரிமினல்களின் SIM கார்டுகளை உடனே முடக்க SP-களுக்கு அதிகாரமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சந்தேகத்துக்கு உரியவர்களின் லொக்கேஷன்கள், வங்கி & தொலைபேசி விவரங்களை உடனடியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம், முதல்கட்டமாக தெலங்கானாவில் அமல்படுத்தப்படவுள்ளது.