News January 5, 2025
மாதம் ₹3000 பென்ஷன் வாங்க உடனே அப்ளை பண்ணுங்க

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு e-Shram திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 60 வயதைக் கடந்த பிறகு மாதம் ₹3000 பென்ஷன், ₹2 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும். 18 – 59 வயதுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஆதார், பேங்க் அக்கவுண்ட், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனை ரெடியா வச்சிக்கிட்டு, இந்த <
Similar News
News September 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 457 ▶குறள்: மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். ▶பொருள்: நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.
News September 13, 2025
மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை: ஆதவ் அர்ஜுனா

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தால் தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 1967-ல் சாமானிய புரட்சி, 1977-ல் சரித்திர புரட்சி என்ற வரிசையில் 2026-ல் விஜய் தலைமையில் தமிழகம் ஜனநாயக புரட்சியை சந்திக்கும் என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற பிரசார முழக்கம் இனி உலகம் முழுக்க ஒலிக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News September 13, 2025
டிவி பார்க்கும் போது சாப்பிட்டா இவ்வளவு பிரச்னையா!

★டிவியை பார்க்கும் போது கூடுதலாக சாப்பிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ★அவ்வாறு சாப்பிடும்போது ‘போதும்’ என்று மூளை சமிக்ஞை செய்யும். ★ஆனால், கவனம் முழுவதும் டிவி திரையில் இருப்பதால் மூளையின் சமிக்ஞையை உணர முடியாமல் போகும். ★இதனால் விரைவாக சாப்பிட நேரிடும். ★இதன் காரணமாக வயிற்று உப்புசம், அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.