News March 17, 2024

APPLY NOW: தமிழ்நாடு காவல்துறையில் பணி

image

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 54 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 – 32 வயதுடையவர்கள், https://eservices.tnpolice.gov.in/ என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் சென்னையில் உள்ள DGP அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

Similar News

News July 7, 2025

தூத்துக்குடி மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு லீவு!

image

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி வேலைநாளாகும். அதேபோல், யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டையின் சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். SHARE IT.

News July 7, 2025

டாக்டராக ஆக வேண்டுமென்பது கனவு: மமிதா பைஜூ

image

‘ஜனநாயகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன் டாக்டராக வேண்டுமென தான் கனவு கண்டதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த தனது தந்தை எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டதாகவும் கூறினார்.

News July 7, 2025

பெரியவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்

image

உடல் ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி மிகவும் அவசியம், மேலும் இது பல நோய்களைத் தடுக்க உதவும். பெரியவர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (தோராயமாக 3 கிலோமீட்டர்) நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப இதை 4,000 முதல் 10,000 அடிகள் வரை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடைபயிற்சி தூரம் வேறுபடலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

error: Content is protected !!