News March 30, 2024
APPLY NOW: இந்திய விமான நிலையத்தில் பணி

இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 490 இளநிலை அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிஇ அல்லது பிடெக் முடித்த 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். GATE-2024 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான இணையதளம்: <
விண்ணப்பிக்க கடைசி நாள்: 1 மே 2024
Similar News
News January 25, 2026
ராசி பலன்கள் (25.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 25, 2026
மீண்டும் தமிழகம் வரும் அமித்ஷா

மாற்று கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் முதலில் தொய்வில் இருந்த NDA கடந்த 2 வாரத்தில் வேகமாக செயல்பட்டது. அதன் விளைவாக பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து தங்களின் பலத்தை NDA அதிகரித்தது. இந்நிலையில், வரும் ஜன.28, 29 தேதிகளில் அமித்ஷா தமிழகம் வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
News January 25, 2026
தீபத்தூணில் விளக்கேற்றிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிகோரிய வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு சின்மயா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் போன்று தூண் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதில் தீபம் ஏற்றினார்.


