News May 14, 2024
Apply Now: நாளை கடைசி

உதவி அறுவை சிகிச்சை நிபுணருக்கான (Assistant Surgeon) 2,553 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நாளையே கடைசி நாள் ஆகும். UGC அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றி விண்ணப்பதாரர்கள், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ₹56,100- ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
ஜனநாயகன் படத்திற்கு மீண்டும் சிக்கல்

‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை மறுதணிக்கை குழுவிடம் காண்பிக்க படக்குழுவினர் நேற்று மாலை 6 மணிவரை காத்திருந்ததாகவும், ஆனால் இறுதிவரை ஸ்கிரீனிங் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. தெலங்கானா, கர்நாடகாவில் இருந்து வரவேண்டிய உறுப்பினர்கள் சென்னைக்கு வரவில்லையாம். மறுதணிக்கை குழு படத்தை எப்போது பார்க்கும் என்ற தகவலும் உறுதியாக தெரியவில்லை.
News March 18, 2026
ஆண்மையற்றவர் எனப் பொய் புகார் கூறுவது மனக் குரூரம்: HC

ஆண்மையற்றவர் என்று கணவன் மீது பொய் குற்றம்சாட்டுவது மனக்குரூரம் என ஜார்கண்ட் HC கண்டனம் தெரிவித்துள்ளது. ஆண்மையின்மை குற்றச்சாட்டு கணவரின் நற்பெயரை பாதிக்கும் என்பதுடன், தீவிர மனவேதனையை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். விவாகரத்து வழங்கிய குடும்ப நல கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இக்கருத்தை தெரிவித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்தது.
News March 18, 2026
திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


