News August 24, 2024
APPLY NOW: தமிழக அரசில் 861 பணியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன் அசிஸ்டென்ட், சர்வேயர் உள்ளிட்ட 861 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ITI, மூன்றாண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 18 – 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.11 வரை விண்ணப்பிக்கலாம்.
Similar News
News August 18, 2025
சென்னைக்கு படையெடுத்த மக்கள்: கடும் வாகன நெரிசல்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்ததால் சென்னையில் பணிபுரியும் வெளிமாவட்டத்தினர் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்நிலையில், விடுமுறை முடிந்து பலர் சென்னையை நோக்கி மீண்டும் படையெடுத்தனர். இதனால் நேற்றிரவு கிளம்பாக்கம், பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழையும் பெய்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
News August 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 431 ▶குறள்: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. ▶ பொருள்: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
News August 18, 2025
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா: எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என எல்.முருகன் விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து M.P, MLA ஆக வேண்டும் என்பதற்காக பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கு என்ன என்ற எண்ணத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்றும், மாறி மாறி பேசி வருவதால் அவர் நிலையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.