News July 15, 2024

Apply Now: வங்கிகளில் 6,128 Clerk பணியிடங்கள்

image

பொதுத்துறை வங்கிகளில் 6,128 Clerk பணியிடங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ₹850, SC, ST-க்கு ₹175. முதல் நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்திலும், முதன்மைத் தேர்வு அக்., மாதத்திலும் நடைபெறும். மேலும், தமிழ்நாட்டில் SC, ST பிரிவினருக்கு ஆக.12 – 17 வரை இப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

Similar News

News November 24, 2025

நடிகர் ரஜினி கண்ணீர் அஞ்சலி

image

நடிகர் தர்மேந்திரா மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘பிரியாவிடை நண்பரே, உங்களின் பொன்னான மனதையும் நாம் பகிர்ந்த தருணங்களையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ‘RIP தரம் ஜி’ என உருக்கமாக பதிவிட்ட அவர், தர்மேந்திராவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சிம்ரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தர்மேந்திரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

News November 24, 2025

சிறுவர்கள் SM பயன்படுத்த தடை: மலேசியா முடிவு

image

<<18255562>>ஆஸி.,யில்<<>> 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சமூக வலைதளங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை டிச.10 முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இதேபோன்ற தடையை 2026 முதல் கொண்டுவர மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இணைய அச்சுறுத்தல்கள், மோசடிகள், ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதே இதன் முக்கிய குறிக்கோள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்ற தடையை இந்தியாவில் கொண்டு வருவது பற்றி உங்கள் கருத்து?

News November 24, 2025

கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: ராகுல்

image

<<18375107>>தர்மேந்திராவின் மறைவு<<>> இந்திய கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது இரங்கல் பதிவில், ஏறக்குறைய ஏழு தசாப்தங்களாக சினிமாவுக்கு தர்மேந்திரா ஆற்றிய இணையற்ற பங்களிப்பு எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் நினைவுகூரப்படும் என்று ராகுல் கூறியுள்ளார். இதனிடையே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!