News April 4, 2024
Apply Now: 490 காலிப் பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ₹40,000 – ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும் இந்தப் பணியிடங்களுக்கு, நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள இன்ஜினியர்கள், வரும் மே 1ஆம் தேதிக்குள் <
Similar News
News January 17, 2026
விஜயமங்கலம் அருகே விபத்து: ஒருவர் பலி

திருப்பூர் பத்மாவதி நகரைச் சேர்ந்த இளங்கோ (55), கடந்த 11-ம் தேதி பைக் மூலம் பெருந்துறைக்குச் சென்றபோது விஜயமங்கலம் அருகே பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், பெருந்துறை GHல் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 17, 2026
நடப்பது Vs படிக்கட்டில் ஏறுவது: FAT-ஐ குறைக்க எது பெஸ்ட்?

கொழுப்பை குறைக்க, கலோரிகளை எரிக்க நடப்பதும், படிக்கட்டுகளில் ஏறுவதும் சிறந்த தேர்வு. *நடப்பது: எந்த வயதினரும் பாதுகாப்பாக செய்யக்கூடியது, வேகமாக நடந்தால் அதிக கலோரிகளை எரிக்கலாம், மன அழுத்தத்தை குறைக்கும். *படிக்கட்டுகளில் ஏறுவது: நடப்பதை விட கடினம். ஆனால், இடுப்பு, கால் தசைகள், உடலின் மைய தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து வேகமாக அதிக கலோரிகளை எரிக்க உதவும். வயது, உடல் வலிமைக்கேற்ப தேர்வு செய்யுங்கள்!
News January 17, 2026
‘அதிமுக கூட்டணியில் புதிதாக 4 கட்சிகள்’

PM மோடி தலைமையில் வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தில், NDA-ல் இடம்பெறும் கட்சிகள் பற்றி அறிவிக்கப்படும் என பாமக Ex MLA மு.கார்த்தி கூறியிருக்கிறார். தங்களது கூட்டணியில் மேலும் 4 கட்சிகள் வர உள்ளதாக கூறிய அவர், அவை எந்த கட்சிகள் என்று இப்போது சொல்ல முடியாது என்றார். மேலும், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே தங்கள் கூட்டணியின் பொதுவான நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.


