News May 23, 2024

APPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்

image

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளன. எழுத்துத் தேர்வு செப்.1ஆம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஜூன் மாதமும், பயிற்சி 2025 ஜூலை 2ஆம் தேதியும் தொடங்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 4ஆம் தேதிக்குள் <>upsc.gov.in<<>> என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 23, 2026

தவெக கூட்டணி அமைத்தது.. விஜய் அதிரடி

image

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் <<19454919>>நேமக உடன் தவெக கூட்டணி <<>>அமைத்தது. அக்கட்சிக்கு 2 தொகுதிகளை விஜய் ஒதுக்கியுள்ளார். ஏப்.9-ல் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏப்ரல் தொடக்கத்தில் அவர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியலை நேற்று விஜய் வெளியிட்டிருந்தார்.

News March 23, 2026

NDA தொகுதி பங்கீடு: யாருக்கு பிளஸ்? யாருக்கு மைனஸ்?

image

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான <<19456139>>தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது<<>>. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் 20 தொகுதிகள் பெற்ற பாஜக, இம்முறை கூடுதலாக 7 தொகுதிகள் பெற்றுள்ளது. அதேபோல் கடந்த முறை 23 தொகுதிகளை பெற்ற பாமகவுக்கு, இந்த முறை 18 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், தனி கூட்டணி அமைத்து 165 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அமமுக, இம்முறை 11 தொகுதிகளில் சுருங்கியுள்ளது. உங்க கருத்து என்ன?

News March 23, 2026

கடன் தள்ளுபடி இல்லை.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

image

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமெண்டில் அறிவித்துள்ளார். அதேநேரம், கிசான் கடன் அட்டை மூலம் வட்டி மானிய திட்டத்தில் போதுமான அளவு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!