News April 22, 2024
Apply Now: 10ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் 422 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Ramp Driver, Handyman பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18 – 29. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 25. தேர்வு: எழுத்து தேர்வு. ஊதிய வரம்பு: ₹22,530 – ₹24,960/-. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News November 12, 2025
CINEMA ROUNDUP: மீண்டும் நடிக்க தயாரான அமலா பால்

*முனீஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது *‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ள தனுஷ் *தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது *மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அமலாபால் *ரிலீஸுக்கு தயாராகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி * சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 15 மில்லியனை கடந்தது.
News November 12, 2025
அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 12, 2025
சஞ்சுவை வாங்க இதுதான் காரணமா?

ஜடேஜாவை கொடுத்தாவது சஞ்சுவை வாங்க, CSK முயற்சி எடுப்பதில் முக்கிய காரணம் ஒன்றும் ஒளிந்திருப்பதாக பேசப்படுகிறது. தோனிக்கு அடுத்து சரியான கேப்டனை நியமிக்க முடியாமல் CSK திணறுகிறது. ஜடேஜா, ருதுராஜ்
ஆகியோர் கேப்டனாக சோபிக்காத நிலையில், தற்போது சஞ்சுவை CSK நிர்வாகம் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே, ஜடேஜாவையும் கொடுக்க முன்வருவதாக கூறப்படுகிறது. இது சரியான முடிவு என நினைக்கிறீங்களா?


