News August 25, 2024

Apply Now : ஆக., 28 வரை காலக்கெடு நீட்டிப்பு!

image

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஆக., 28ஆம் தேதி வரை IBPS ஆணையம் நீட்டித்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். வயது வரம்பு: 20-30. கல்வி தகுதி: Any Degree. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ₹180/-. கூடுதல் தகவல்களுக்கு IBPS என்ற இந்த இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

Similar News

News August 16, 2025

நடிகை கஸ்தூரி தேர்தலில் போட்டி?

image

நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். விரைவில் 2026 தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் போட்டியிடுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தான் நினைக்கவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அத்துடன், திமுகவை வீழ்த்த அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமகவும் இணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News August 16, 2025

திமுகவின் காலை உணவுத்திட்டம் தோல்வி: சீமான்

image

அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் திமுக தவறிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். இதன் விளைவாக தான் 207 பள்ளிகள் மூடப்படதாகவும் கூறினார். காலை உணவுத் திட்டம் துவங்கிய பின் அரசுப்பள்ளிகள் மூடப்படுவது அத்திட்டத்தின் தோல்வியை காட்டுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்தை அரசுப்பள்ளிகள் தரமுடியாமல் போனது திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தோல்வி என்றார்.

News August 16, 2025

சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: தமிழிசை

image

தமிழகத்தில் CM ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே கடைசி என்றும், மீண்டும் அவர் முதல்வராக வரமாட்டார் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தியதை பார்க்கும் போது சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை என்றார். மேலும் தான் தென்சென்னையில் போட்டியிட்ட போது 20,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் பாஜகவுக்கான வாக்குகள் என்றும் கூறினார்.

error: Content is protected !!