News April 25, 2024
உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய வணிகக் கடற்படையில் 4,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Sea Man , Deck & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: ₹35,000 – ₹55,000 /-. கூடுதல் தகவல்களுக்கு <
Similar News
News February 15, 2026
தேமுதிகவிடம் கறார் காட்டும் திமுக, அதிமுக!

தேமுதிக 2 இலக்கத்தில் சீட் கேட்பதால் மாறி மாறி பேரம் பேசி திமுகவும், அதிமுகவும் டயர்ட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இனி ஒற்றை இலக்கம்தான் கொடுப்போம், ஏத்துக்கிட்டா கூட்டணிக்கு வாங்க என தேமுதிகவிடம் இருதரப்பும் கறார் காட்டியிருக்கிறதாம். இந்நிலையில், இதனை ஏற்று பிரதான கட்சிகளான அதிமுக, திமுக இரண்டில் ஒன்றை பிரேமலதா தேர்வு செய்வாரா (அ) தவெக பக்கம் சாய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
News February 15, 2026
காங்., கனிமொழியை கைது செய்தும்: நாராயணன் திருப்பதி

காங்., கனிமொழியை கைது செய்தபோது திமுக அவர்களுடன் கூட்டணியில் நீடித்ததை விட கேவலம் ஏதாவது இருக்குமா என நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார். ரெய்டுக்கு பயந்து பாஜகவோடு EPS கூட்டணி என CM கூறியதற்கு பதிலளித்த அவர், 2014-ல் கலைஞர் TV-ல் ரெய்டு நடத்தியதற்கு பயந்து காங்., கூட்டணியில் திமுக இணைந்ததை விட வெட்கக்கேடான செயல் உண்டா எனவும் சாடியுள்ளார். மேலும், இதுதான் திராவிட மாடலா எனவும் கிண்டலடித்துள்ளார்.
News February 15, 2026
அன்புத்தம்பி காலமானார்.. ரஜினி கண்ணீர் அஞ்சலி

RM வீரப்பனின் மூத்த மகனான வீ. <<19147099>>தமிழ் அழகன்<<>> நேற்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மதிப்பிற்குரிய அமரர் RM வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழ் அழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.


