News July 27, 2024
APPLY: சிஆர்பிஎப்பில் மருத்துவர்களுக்கு வேலை

சிஆர்பிஎப் சார்பில் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 32 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும், சம்பளம் மாதம் ₹75,000-₹85,000 என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <
Similar News
News March 5, 2026
மக்களுடன் தான் தவெக கூட்டணியா?

காங்., உடன் கைகோர்க்கலாம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தவெகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன், முஸ்தபா ஆகியோர் விஜய்க்கு ஆதரவளித்தாலும், பெரிய கட்சியான காங்., வரும் என்ற நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ‘மக்களுடனே கூட்டணி’ என்ற நிலைப்பாட்டை விஜய் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
News March 5, 2026
மொத்தமாக ₹8,500 சம்பள உயர்வு.. இன்ப அதிர்ச்சி

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இதன்படி, <<19299732>>டாஸ்மாக்<<>> ஊழியர்களுக்கு மேலும் ₹1,000 சம்பளம் உயர்வு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக <<19242295>>₹2,500<<>> சம்பளம் உயர்வு, கவுரவ விரிவுரையாளர்களுக்கு ₹5,000 உயர்த்தி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளால் அந்தந்த ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.
News March 5, 2026
வாழ்க்கை பிரகாசிக்க செய்யும் வெண்பூசணி வழிபாடு

புதுக்கோட்டை, திருமயம் என்னும் ஊரில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிகோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும்.


