News August 6, 2024
APPLY: இஸ்ரோவில் ₹96,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “Continuous Airworthiness Manager” என்ற பதவி காலியாக இருப்பதாகவும், அதற்கு மாத ஊதியமாக ₹96,000 வழங்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளோர் நாளை முதல் www.nrsc.gov.in என்ற இணையதளத்தில் இம்மாதம் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
Similar News
News January 20, 2026
சூடுபிடிக்கும் தங்கம் திருட்டு வழக்கு: 21 இடங்களில் ரெய்டு

<<18345270>>சபரிமலையில்<<>> தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய 21 இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் தங்க முலாம் பூசும் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது.
News January 20, 2026
ஜன நாயகன் ரிலீஸ்: ஐகோர்ட் சரமாரி கேள்வி

ஜன நாயகன் வழக்கை விசாரித்த சென்னை HC அமர்வு, U/A சான்றிதழ் தர முடிவு செய்துவிட்டு அதனை மாற்றியது ஏன் என தணிக்கை வாரியத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், படத்தை பார்த்துவிட்டு யார் புகார் கடிதம் எழுதியது என்ற கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர். மேலும், இன்றே தீர்ப்பளிக்கும் வேண்டும் என்ற SC-ன் உத்தரவையும் சுட்டிக்காட்டிய நிலையில், உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணை தொடரவுள்ளது.
News January 20, 2026
லஞ்சம் பெற்றதற்கு CM உடந்தையா? அண்ணாமலை

அமைச்சர் KN.நேருவுக்கு எதிராக ED மூன்றாவது அறிக்கை சமர்ப்பித்து அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு CM கொடுப்பதற்கு 2 விளக்கங்கள் மட்டுமே உள்ளதாக கூறிய அவர், ஒன்று ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை என சொல்லவேண்டும் (அ) இதற்கு தானும் முழு உடந்தை என ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மேலும், திமுக ஆட்சியின் நிர்வாகம் சீரழிந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.


