News August 4, 2024

POST OFFICE வேலைக்கு விண்ணப்பிக்க… (1/3)

image

தபால் நிலைய 44,228 வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம். இந்திய தபால் துறையின் இணையதளமான <>indiapostgdsonline.gov.in <<>>இணையதளத்துக்கு சென்று அங்கு மேலே இருக்கும் STAGE REGISTRATION என்பதை அழுத்த வேண்டும். அதை அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, தந்தை பெயர், பிறந்த தேதி, விண்ணப்பிப்பவரின் பாலினம், மதம், படிப்பை உள்ளிட வேண்டும்.

Similar News

News October 18, 2025

Sports Roundup: பேட்மிண்டனில் லக்‌ஷயா சென் ஏமாற்றம்

image

*டென்மார்க் ஓபன் பேட்மிண்டனில், ஆடவர் இரட்டையரில் சாத்விக், சிராக் இணை அரையிறுதிக்கு முன்னேற்றம். *ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் லக்‌ஷயா சென் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். *புரோ கபடி லீக்கில் பாட்னா பைரேட்ஸ் 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. *மகளிர் உலகக் கோப்பையில், இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றது.

News October 18, 2025

மாநகராட்சி முறைகேட்டில் மர்மம் நீடிக்கிறது: நயினார்

image

மதுரை மாநகராட்சி முறைகேட்டில் சிறிய மீன்களை பலியிட்டு பெரிய தலைகளைக் காப்பாற்ற திமுக முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, நெல்லை, மதுரை மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது, திமுகவின் நிர்வாக தோல்வியை காட்டுவதாக கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து CBI விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

ராகுல் காந்தியை சாடிய அமெரிக்க பாடகி

image

டிரம்ப்புக்கு PM மோடி பயப்படுவதாக பதிவிட்ட ராகுல் காந்திக்கு, அமெரிக்க பாடகி மேரி மில்பென் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப்புக்கு PM மோடி பயப்படவில்லை என குறிப்பிட்டுள்ள மேரி மில்பென், இந்திய நலனுக்கு எது சிறந்ததோ அதையே அவர் செய்வதாக கூறியுள்ளார். மேலும், ராகுலுக்கு இந்திய பிரதமராகும் திறமை இல்லை என்றும் தலைமைப்பண்பு பற்றி தெரிய வாய்ப்பில்லை எனவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!