News June 7, 2024
போட்டித் தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு ஜூலை 14ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நுழைவுத்தேர்வுக்கு wwww.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 8 முதல் 23 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள், வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சி அல்லது SSC, ரயில்வே தேர்வுகளுக்கான பயிற்சி மேற்கொள்ள முடியும்.
Similar News
News September 23, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 23 அன்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. தவெக, காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
News September 23, 2025
சிறுநீர் கழிக்கையில் எரிச்சல்.. காரணம் என்ன?

மனிதர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு ஆகியவை காரணமாகும். இதற்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து வயிற்றில் கல் இருக்கிறதா என அறிய வேண்டும். அதன் பிறகு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் எடுத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலுக்கு தீர்வு காணலாம்.
News September 23, 2025
தாறுமாறாக மாறிய தங்கம் விலை

வரலாறு காணாத உச்சமாக, தங்கம் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்து நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 1920-ல் சவரன் ₹21-க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதன்படி, 105 ஆண்டுகளில் 3,97,235% தங்கம் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021 (₹35,000) முதல் 2025 இன்று வரையிலான (₹85,120) 5 ஆண்டுகளில் மட்டும் 138% தங்கம் விலை உயர்ந்துள்ளது.