News September 23, 2025
மத்திய அரசில் 7,267 பணியிடங்கள்: Apply பண்ணுங்க

EMRS எனப்படும் மத்திய அரசு பள்ளிகளில் 7,267 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: டிகிரியுடன் B.Ed. வயது வரம்பு: அதிகபட்சமாக 55. சம்பளம்: ஆசிரியரல்லாத பணிகளுக்கு ₹18,000 – ₹1,12,400, ஆசிரியர் பணிகளுக்கு ₹35,400 – ₹2,09,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.23. விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
Similar News
News September 23, 2025
சிறுநீர் கழிக்கையில் எரிச்சல்.. காரணம் என்ன?

மனிதர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு ஆகியவை காரணமாகும். இதற்கு சிறுநீர் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து வயிற்றில் கல் இருக்கிறதா என அறிய வேண்டும். அதன் பிறகு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை அல்லது மருந்துகள் எடுத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலுக்கு தீர்வு காணலாம்.
News September 23, 2025
தாறுமாறாக மாறிய தங்கம் விலை

வரலாறு காணாத உச்சமாக, தங்கம் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்து நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 1920-ல் சவரன் ₹21-க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதன்படி, 105 ஆண்டுகளில் 3,97,235% தங்கம் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021 (₹35,000) முதல் 2025 இன்று வரையிலான (₹85,120) 5 ஆண்டுகளில் மட்டும் 138% தங்கம் விலை உயர்ந்துள்ளது.
News September 23, 2025
ஆண்மையை பாதிக்கும்… WARNING!

விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது தரத்தை பாதிக்கக்கூடிய உணவுகளின் பட்டியல் மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த உணவுகள் “விந்தணுக்களைக் கொல்லும்” உணவுகள் அல்ல. ஆனால், இந்த உணவுகளை அதிகளவில் அல்லது தொடர்ந்து உட்கொண்டால், காலப்போக்கில் விந்தணுக்களை பாதிக்கும். உங்களுக்கு தெரிந்த டிப்ஸை கமெண்ட்ல சொல்லுங்க. பயனுள்ள செய்தியை SHARE பண்ணுங்க.