News August 17, 2024
APPLY: ரயில்வேயில் 4,096 அப்ரன்டிஸ் வேலை

இந்திய ரயில்வேயின் வடக்கு பிரிவில் 4,096 அப்ரன்டிஸ் வேலைக்கான விண்ணப்பப்பதிவு RRC இணையதளத்தில் தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் செப்.16 வரை விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு, ITI படிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக செப்.16 தேதிப்படி, 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், பிறருக்கு 3 ஆண்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.
News August 15, 2025
இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.
News August 15, 2025
ஆக.19-ம் தேதி இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அணித் தேர்வு கூட்டம் முடிந்தபின், அஜித் அகர்கர் அணியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தேசமான அணி விவரம்: அபிஷேக், சாம்சன், சூர்யா, திலக், ஹர்திக், கில், துபே, அக்சர், சுந்தர், வருண், குல்தீப், பும்ரா, அர்ஷ்தீப், ஹர்ஷித் / பிரசித், ஜிதேஷ்/ஜுரெல் ஆகியோர். உங்கள் கணிப்பு யார் யார்?