News June 25, 2024
17,727 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 24.7.2024-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. SSC CGL-2024 மொத்தம் 17,727 காலிப் பணியிடங்கள். ஆன்லைன் கட்டணம் செலுத்த கடைசி நாள் 25.7.24. விண்ணப்பத் திருத்தம் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 10,11. முதல்நிலை கணினி வழி தேர்வு: செப் – அக்டோபர், இரண்டாம் நிலை கணினி வழி தேர்வு: டிசம்பர். மேலும், விவரங்களை https://ssc.gov.in-இல் பார்க்கவும்.
Similar News
News November 24, 2025
தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கனமழை வெளுக்கும்: IMD

வங்கக் கடலில் ஒரே நேரத்தில் 3 சுழற்சிகள் நிலவுவதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், தென் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 29-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருங்க நண்பர்களே!
News November 24, 2025
சாக்பீஸை வைத்து இதெல்லாம் செய்யலாமா?

சிறு பொருளுக்குள் எத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? பள்ளிக்கூடத்து நினைவுகளுடன் பின்னி பிணைந்த சாக்பீஸ், கரும்பலகையில் எழுத மட்டும் தான் என நினைக்கிறோம். ஆனால் அதில், வீட்டை பராமரிப்பதில் இருந்து துணிகளில் உள்ள கறைகளை நீக்குவது வரை, பலரும் அறியாத அற்புத பயன்கள் புதைந்துள்ளன! அவற்றை அறிய மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 24, 2025
புயல் உருவாகும் தேதி அறிவிப்பு.. கனமழை வெளுக்கும்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் (நவ.26) புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் பெய்துள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.


