News January 19, 2025

புதிய ரேஷன் கார்டு கோரி குவியும் விண்ணப்பங்கள்

image

மகளிர் உரிமைத் தொகை பெற பலரும் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தனி ரேஷன் கார்டு அவசியம் என்பதால், பெற்றோர் கார்டில் இருந்து தங்களின் பெயரை நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Similar News

News March 24, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

image

ஆபரணத் தங்கம் விலை <<19461962>>சவரனுக்கு ₹2,720<<>> குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹240-க்கும், கிலோ வெள்ளி ₹2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் கிலோவுக்கு ₹15,000 குறைந்து ₹2,35,000-க்கு விற்பனையானது. பின்னர், இரவில் ₹15,000 அதிகரித்த நிலையில், மீண்டும் ₹10,000 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

News March 24, 2026

மக்களை காக்க PM முதலில் தயாரா? CM ஸ்டாலின்

image

மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து மக்களை காக்க பல முறை வலியுறுத்தியும் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என CM ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள் தயாராக இருக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் PM மோடி பேசியதை விமர்சித்த அவர், மக்களை காக்க நீங்கள் முதலில் தயாரா என கேட்டுள்ளார். மேலும், தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? நாட்டு மக்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 24, 2026

ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்.. முதலீட்டாளர்கள் நிம்மதி!

image

பெரிய சரிவுக்கு பிறகு பங்குச்சந்தைகள் இன்று சற்று மீண்டுள்ளது. சென்செக்ஸ் 844 புள்ளிகள் உயர்ந்து 73,525 புள்ளிகளிலும், நிஃப்டி 262 புள்ளிகள் உயர்ந்து 22,775 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் சுமார் ₹15 லட்சம் கோடியை இழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!