News March 19, 2024
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டும் ஆப்பிள்!

ஐஃபோனில் ஜெமினி ஏ.ஐ தொழில்நுட்பத்தை இடம்பெற செய்வது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில், ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் ஜெமினி ஏ.ஐ வசதிகள் இடம்பெறும். இதே போன்று, ஐஃபோனில் சாட்ஜிபிடி-ஐ இடம்பெற செய்வது தொடர்பாக ஓபன் ஏ.ஐ நிறுவனத்துடனும் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Similar News
News November 17, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹10,000 குறைந்தது

தங்கம் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹173-க்கும், கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி விலை மொத்தம் ₹10,000 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News November 17, 2025
2,623 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்: APPLY

ONGC-ல் காலியாகவுள்ள 2,623 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: 18- 24. கல்வித்தகுதி: 10th, 12th, ITI, டிகிரி. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு. உதவித்தொகை: ₹8,200- ₹12,300 விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகம்: ஏ.பி.முருகானந்தம்

பிஹாரை தொடர்ந்து, பாஜகவின் அடுத்த இலக்கு தமிழகமும், மேற்கு வங்கமும்தான் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள் என்ற பொய்யை ஆளும்கட்சி தொடர்ந்து கட்டமைத்து வருகின்றது. ஆனால், அந்த பிம்பம் உடைந்து கொண்டிருக்கிறது. பாஜக என்ற வார்த்தையை சொல்லாமல், யாரும் அரசியல் செய்ய முடியாது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் நடக்கும் என்றார்.


