News August 27, 2024

செப்டம்பர் 9ஆம் தேதி Apple Event

image

உலகிலுள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Apple Event, செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அப்போது, Apple தயாரிப்புகள் மற்றும் அம்சங்களை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெறவுள்ள இந்த ஈவன்ட்டில், ஐபோஃன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் போன்ற தயாரிப்புகளை விளம்பரப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Similar News

News July 6, 2025

பாஜகவின் திட்டம் பலிக்காது: அன்வர் ராஜா பாய்ச்சல்

image

தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது என அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா கூறியுள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு கிடைக்காது எனவும் சர்ச்சையான கருத்தைக் கூறியுள்ளார். இது, கூட்டணியிலிருந்து பாஜகவை கைகழுவும் முடிவோ? என பலரும் கருத்து கூறுகின்றனர்.

News July 6, 2025

உங்க ஆதார் தவறாக யூஸ் பண்றாங்க என சந்தேகமா?

image

உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் ★<>myAadhaar<<>> போர்ட்டலுக்கு சென்று, மொபைல் எண்ணுடன் Log in செய்யுங்க ★மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ★உங்களின் ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள் ★அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ அல்லது help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

News July 6, 2025

SJ சூர்யா கேட்ட கேள்வி… யாராக இருக்கும்?

image

‘கில்லர்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வரும் SJ சூர்யாவின் பதிவு ஒன்று நெட்டிசன்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பதிவில் கிட்டார் ஒன்றுடன் துப்பாக்கி இணைந்திருக்கும் ஒரு ஸ்டில் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘Guess the killer composer’ என்றும் கேப்ஷன் வைக்கப்பட்டுள்ளது. பதில் வரும் 7-ம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாராக இருக்கும் என நீங்க நினைக்கிறீங்க?

error: Content is protected !!