News August 4, 2024
உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக மேல்முறையீடு?

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். எஸ்சி கோட்டாவில் கிரிமீலேயரை அனுமதிக்க முடியாது என்ற அவர், எஸ்சி ஒதுக்கீட்டுக்குள் உள்ஒதுக்கீட்டை அனுமதிப்பது, சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட பிரிவினரை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றாது என்றார்.
Similar News
News December 9, 2025
புதுச்சேரியில் கூட்டணி உறுதியாகிறதா? VIRAL PHOTO

புதுச்சேரியில் இன்று தவெக பரப்புரையில், விஜய், CM ரங்கசாமி இருவரும் உள்ள போட்டோ ஃபிரேம் பேசுபொருளாகியுள்ளது. விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரங்கசாமியுடன் நட்பு பாராட்டி வந்தார். புதுச்சேரியில் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதற்கும் CM பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த போட்டோ மூலம் கூட்டணி உறுதியாகுமா என தொண்டர்கள் கேட்டு வருகின்றனர். தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையுமா?
News December 9, 2025
பிரபல தமிழ் நடிகை திருமணம் நிறுத்தமா?

நிவேதா பெத்துராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம், நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறி காதலர் ரஜித் இப்ரானுடனான போட்டோக்களை பதிவிட்டார். இந்நிலையில், திடீரென SM பக்கங்களில் இருந்து நிச்சயதார்த்த போட்டோக்களை நீக்கியுள்ளது, ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜித்தும், தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து போட்டோக்களை நீக்கியுள்ளார். இந்நிலையில், திருமணம் நின்றுவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News December 9, 2025
இன்று வரலாறு படைப்பாரா பும்ரா?

SA-க்கு எதிரான <<18509403>>டி20 தொடர்<<>> இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தற்போது வரை டி20 போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பும்ரா, இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் போதும், வரலாறு படைப்பார். அதாவது, 3 வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைப்பார். T20 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் மாறுவார்.


