News October 24, 2024
பகிரங்க மன்னிப்பு கேட்கணும்: திமுக அமைச்சர் எச்சரிக்கை

₹10 கோடி மான நஷ்டஈடு கோரி அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. ₹411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ராஜகண்ணப்பன் அபகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில், தவறான செய்தியை வெளியிட்டதற்காக 7 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
News July 8, 2025
டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: இஸ்ரேல் கடிதம்

USA அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசு கமிட்டிக்கு கடிதம் அனுப்பி பரிந்துரைத்துள்ளதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இரவு விருந்தில், தனிப்பட்ட முறையில் டிரம்ப்பிடமும் அக்கடிதத்தை அவர் கொடுத்தார். இதற்கு தகுதியான நீங்கள் நிச்சயம் விருதை வெல்வீர்கள் என்றும் அவர் US அதிபரிடம் கூறினார். இது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
News July 8, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 8) சவரனுக்கு ₹400 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,060-க்கும், சவரன் ₹72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.