News June 16, 2024
எதையும் ஹேக் செய்யலாம்: எலான் மஸ்க்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என, எலான் மஸ்க் கூறிய கருத்து உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவில் உள்ள EVM-கள் பாதுகாப்பானது. தேவைப்பட்டால் எப்படி தயாரிப்பது என கற்றுத்தருகிறோம் என்று கூறினார். இதற்கு உடனடியாக பதிலளித்துள்ள மஸ்க், எதையும் ஹேக் செய்யலாம் (Anything can be hacked) எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
லோகேஷ் – அமீர்கான் படம் கைவிடப்பட்டதா?

லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் இணைந்து பணியாற்றவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சித்தாரே ஜமீன் பர்’ பட நிகழ்ச்சியில் அமீர்கான், லோகேஷ் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறினார். ஆனால் தற்போது கமல் – ரஜினி படம், கைதி 2-ல் லோகேஷ் கவனம் செலுத்தி வருகிறார். அமீர்கான் உடனான படம் கைவிடப்பட காரணம் என்ன? தேதிகள் பிரச்னையா என உறுதியான தகவல் தெரியவில்லை.
News September 13, 2025
செப்டம்பர் 13: வரலாற்றில் இன்று

*1948 – ஐதராபாத்தை இந்திய ஒன்றியத்தில் இணைக்க துணை பிரதமர் வல்லபாய் பட்டேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். *1960 – நடிகர் கார்த்திக் பிறந்தநாள். *2008 – டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழப்பு.
News September 13, 2025
BCCI-க்கு வலுக்கும் கண்டனம்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட வடு இன்னும் மறையாத நிலையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது அவசியமா என்றும் பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் நோக்கமா எனவும் BCCI-க்கு SM-ல் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, மத்திய அரசு அனுமதித்ததால் பாக். உடன் விளையாடுவதாக BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.