News January 7, 2025

20 வயதுக்கு மேல் உள்ளவரா… இதை செய்யாதீங்க!

image

உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்தல், உடல் உழைப்பு இல்லாமை (அ) சோம்பலான வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், அதிகமான மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உணவில் உப்பு அளவை குறைத்தல், தினமும் 30 நிமிட உடற்பயிற்சி, புகைப்பிடித்தல் மற்றும் மதுவை தவிர்த்தல், மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகள் & யோகா போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்த ஆபத்தை தடுக்கலாம்.

Similar News

News January 16, 2026

புதுச்சேரியில் ரூ.1.13 கோடி ஆன்லைன் மோசடி

image

அதிக லாபம் தரும் ஆன்லைன் டிரேடிங் ஆசையில் விழுந்து, புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேர், வாட்ஸ்ஆப் குழு மூலம் சுமார் 1.15 கோடி ரூபாய்க்கும் மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 16, 2026

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் கை ஓங்கியதா?

image

மும்பை, புனே உள்பட மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை மாநகராட்சியில் (BMC) பாஜக தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி 88 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. தாக்கரே சகோதரர்கள் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மும்பை மட்டுமல்லாமல் மீதமுள்ள 28 மாநகராட்சிகளிலும், ‘மஹாயுதி’ கூட்டணியே முன்னிலை வகித்து வருகிறது.

News January 16, 2026

வெள்ளி விலை இன்று ₹4,000 குறைந்தது

image

தங்கம் விலை இன்று(ஜன.16) <<18869879>>சவரனுக்கு ₹480<<>> குறைந்தது போல், வெள்ளியும் கிலோவுக்கு ₹4,000 குறைந்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் 1 கிராம் வெள்ளி ₹306-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹3,06,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளதால், இந்திய சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது.

error: Content is protected !!