News August 17, 2024
யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்: பிரேமலதா

ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். முதல்வராக யார் வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து வாக்களிப்பார்கள் என்று தெரிவித்த அவர், தேமுதிக எப்போதும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக செயல்படுகிறது என்றார். முன்னதாக, தலித் ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராக வர முடியாது என திருமாவளவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 3, 2026
வீட்டில் வளர்க்கக் கூடிய மூலிகை செடிகள்

உங்கள் வீட்டின் பால்கனியை எளிதாக தோட்டமாக மாற்றலாம். பெரும்பாலானோர் அழகு செடிகளை வளர்ப்பதில் ஆர்வம் செலுத்துவார்கள். தினசரி பயன்பாடு மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளையும் எளிதாக வளர்க்கலாம். அந்த செடிகள் சிலவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். நீங்க என்ன செடி வளர்க்க போறீங்க. கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT.
News January 3, 2026
திமுகவுக்கு தகுதி இல்லை: சீமான்

இலக்கு வைத்து மது விற்கும் திமுக அரசுக்கு, போதை ஒழிப்பு பற்றி பேச தகுதி இல்லை என சீமான் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், உங்களுக்கு தெரியாமல் போதை பொருள் நாட்டிற்குள் வருகிறது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என்றும், போதைக்கு அடிமையாகாமல் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு அதனை விற்பீர்களா என்றும் கேட்டுள்ளார். போதையை ஒழிப்பேன் என கூறுவதெல்லாம் வேடிக்கை எனவும் விமர்சித்துள்ளார்.
News January 3, 2026
காலையில் குறைந்து மாலையில் அதிகரித்த தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில நாள்களாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், மாலையில் ₹640 அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹12,600-க்கும், 1 சவரன் தங்கம் ₹1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


