News June 20, 2024
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அனுஷ்கா

சமந்தா, ஃபகத் பாசில், தீபிகா படுகோனே உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களுக்கு உள்ள நோயை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில், தற்போது நடிகை அனுஷ்காவும் இணைந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ஸ்மைலிங் சின்ட்ரோம்’ என்ற அரிய வகையான சிரிக்கும் வியாதி தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், தான் சிரிக்க ஆரம்பித்தால் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.
Similar News
News November 15, 2025
தமிழில் ரீமேக் செய்து சிதைத்து விட்டோம்: ராணா

‘பெங்களூர் டேஸ்’ மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்து சிதைத்துவிட்டதாக ராணா டகுபதி தெரிவித்துள்ளார். மச்சான் அந்த படத்தில் நிவின் பாலி, பஹத் ஃபாசில், துல்கர் சல்மான் என எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள், இங்கே நாம் மிடில் ஏஜில் ரிட்டயர்ட் ஆனவர்கள் போல் இருக்கிறோம் என ஆர்யா ஷூட்டிங் போதே சொன்னதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். கடைசியில் ஆர்யா கூறியதுதான் நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
தமிழகத்திற்கு நெருக்கமான யூடியூபர் தோல்வி

யூடியூபில் 96 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பிஹார் யூடியூபர் மனிஷ் காஷ்யப், 50,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜன்சுராஜ் கட்சி சார்பில் சான்பாடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,000 வாக்குகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் பிஹாரிகள் அடித்து கொல்லப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பின்னர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


