News August 8, 2024
மனித இனத்திற்கே எதிரானது: கனிமொழி

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் மட்டுமல்லாது மனித இனத்திற்கே எதிரானது என திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் ஏன் தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இதனால் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
இந்த தலையணை மந்திரத்தை மறந்துடாதீங்க..

வசதியாகவும், அலுப்பு இல்லாமல் இருப்பதற்காகவும் தேடித்தேடி தலையணையை தேர்ந்தெடுக்கும் கவனம், அதனை சுத்தம் செய்வதிலும் இருக்க வேண்டும். தலையணை உறையை 3 – 4 நாள்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். தலையணையை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் வெயிலில் காய வைக்க வேண்டும். போர்வைகளை 2 – 3 மாதங்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும். ஏனென்றால், தலையணை உறையில் டாய்லெட்டுக்கு இணையான பாக்டீரியாக்கள் இருக்குமாம். SHARE IT.
News December 7, 2025
புதுசா இருக்குண்ணே.. விரைவில் பராசக்தி கண்காட்சி?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ லாஞ்ச், ஜன., முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 1960 காலகட்ட பொருட்களின் மாதிரிகளை கண்காட்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பெயரில், டிச.16 முதல் ஒரு வாரத்துக்கு கண்காட்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
News December 7, 2025
நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.


