News March 31, 2024

இந்தி எதிர்ப்பு போராட்டம் நெருப்புக்கு சமம்

image

இந்தி எதிர்ப்பு போராட்டம் நெருப்புக்கு சமம் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். “இந்தி எதிர்ப்பு போராட்டம் செருப்புக்கு சமமானது அல்ல, அது நெருப்புக்கு சமமானது. தமிழகத்தில் பற்றி எறிந்த வரலாற்று நெருப்பை யாராலும் மறக்க முடியாது. தமிழர் உணர்வை மதிக்காத எவரையும் தமிழகம் மன்னிக்காது” என்று X-இல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்போடு ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார்.

Similar News

News October 30, 2025

ரயில்வே வேலை வேணுமா? 5,810 Vacancies; முந்துங்க

image

ரயில்வேயில் காலியாக உள்ள நான்-டெக்னிக்கல் (NTPC) பதவிகளில் 5,810 பணியிடங்களுக்கான அறிவிப்பை RRB வெளியிட்டுள்ளது. அதன்படி சீனியர் கிளர்க், அசிஸ்டென்ட் ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நவ.20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 18-33 வயதிற்குள் இருக்க வேண்டும். இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 30, 2025

ஒதுக்கிய ரஜினி – கமல்.. தெலுங்கு பக்கம் சென்ற லோகி!

image

ரஜினி – கமல் இணையும் படத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள லோகேஷ் அடுத்து ‘கைதி 2’ படத்தை இயக்கவுள்ளார். அதே நேரத்தில், ரஜினி- கமலுக்காக எழுதிய ஸ்கிரிப்டை வீணடிக்க வேண்டாம் என KVN தயாரிப்பு நிர்வாகத்திடம் அந்த கதையை லோகேஷ் கூற, அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளனர். தற்போது, இந்த படத்தில் பவன் கல்யாண் மற்றும் பிரபாஸை நடிக்க வைக்கவும் முயற்சி நடந்து வருகிறதாம்.

News October 30, 2025

BREAKING: மீண்டும் இணைந்தார் ஓபிஎஸ்.. அரசியலில் பரபரப்பு

image

அதிமுக உடைந்த பிறகு ஓபிஎஸ் – K.A.செங்கோட்டையன் மீண்டும் இணைந்துள்ளனர். அதிமுக இணைப்பு குறித்து EPS-க்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய செங்கோட்டையன், OPS & TTV-ஐ சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், தேவர் குருபூஜை நாளான இன்று இருவரும் ஒன்றாக இணைந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பசும்பொன்னுக்கு ஒரே காரில் சிரித்துக் கொண்டே OPS, KAS சென்றனர்.

error: Content is protected !!