News February 25, 2025
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: இபிஎஸ் கண்டனம்

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்னும் எங்களை எதிர்த்து எதுவரினும், எவர்வரினும் துஞ்சாது எதிர்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். திமுக அரசு, நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அர்ஜுனனின் கட்சிப் பணியை தடுக்கும் சோதனை வெட்கக்கேடானது என்றும் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
3-ம் உலக போர் மூளுமா?

ஈரானுக்கும் எதிராக பிரச்னையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் US- இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனா, ஈரானுக்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னை ஆசியா, ஐரோப்பா நாடுகளுக்கும் பரவி 3-ம் உலக போர் மூளுமா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. போரால் பெரும் உயிரிழப்புகளும், நீண்டகால பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
News March 3, 2026
சற்றுமுன்: வங்கிக் கணக்கில் மேலும் ரூ.2,000 வந்தது..

முதியோர், கைம்பெண்கள், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு நிதியாக இன்று ₹2,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை ₹1,200, சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3,200 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
BREAKING: கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?

காங்., கேட்கும் கூடுதல் தொகுதிகளை அளிக்க திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால், இன்று நடைபெறும் இறுதி பேச்சுவார்த்தைக்குபின் கூட்டணியிலிருந்து காங்., வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்., வெளியேறும்பட்சத்தில் காலியாகவுள்ள 4 ராஜ்யசபா இடங்களில் தேமுதிகவிற்கு ஒன்று, மீதமுள்ள 3 -ல் திமுகவே களமிறங்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களையும் இன்று மாலை திமுக அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


