News December 29, 2024
பிக்பாஸிலிருந்து அன்ஷிதா, ஜெஃப்ரி எலிமினேட்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், அன்ஷிதா, ஜெஃப்ரி எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 8வது சீசன் BB, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் டாஸ்க்கில் சில போட்டியாளர்கள் இடம்பெறுவார்கள். வார இறுதியில் மக்கள் அளிக்கும் ஓட்டு அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜெஃப்ரி, நாளை அன்ஷிதா வெளியேற உள்ளதாக VIJAY TV வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News August 15, 2025
10% ஆயில் பயன்பாட்டை குறையுங்கள்: மோடி

எதிர்வரும் ஆண்டுகளில் ‘உடல் பருமன்’ நாட்டிற்கு ஒரு பெரிய சவாலாக மாறும் என PM மோடி கவலை தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் பேசிய அவர், மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் 3-ல் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். எனவே, இனி சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்தால், அது ஆரோக்கியத்திற்கு பயனளிக்கும் என்று அறிவுறுத்தினார். உங்கள் கருத்து என்ன?
News August 15, 2025
2 பைசாவுக்கு டீ.. ஒரு குட்டி டைம் டிராவல்

‘1 பைசா கொடுத்தா பெரிய பொட்டலத்துல கடலை பருப்பு தருவாங்க’ என நமது தாத்தா சொல்லக் கேட்டிருப்போம். இன்றைய சூழலில் ஒவ்வொரு பொருளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு பெருகும் மக்கள்தொகை, ரூபாய் மதிப்பு என பல காரணிகள் உள்ளன. இந்நிலையில், சுதந்திரம் அடைந்த 1947-ல் பொருள்களின் விலையையும், இன்றைய விலையையும் மேலே உள்ள படங்களில் காணலாம். இதை நீங்கள் முதல்முதலாக எவ்வளவு விலைக்கு வாங்கினீர்கள்?
News August 15, 2025
BREAKING: நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தார்

நடிகை கஸ்தூரி, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கஸ்தூரி, வலதுசாரி சிந்தனையாளராக தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் மேடைகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், திடீரென அதிகாரப்பூர்வமாக இன்று(ஆக.15) தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார். மேலும், நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான திருநங்கை நமிதா மாரிமுத்துவும் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.