News September 30, 2024
மேலும் ஒரு உலக சாதனை படைத்த இந்தியா

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்தியா இன்று மேலும் ஒரு உலக சாதனை படைத்துள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் 10.1 ஒவர்களில் இந்தியா 100 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 2023ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 12.2 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்தே முந்தைய உலக சாதனையாக இருந்தது. இதை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
Similar News
News August 16, 2025
தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு?

அமைச்சர் ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் காலை முதல் ED சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அத்துடன், அவரது அறைக்குச் செல்லும் நுழைவாயிலுக்கு தலைமைச் செயலக அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.
News August 16, 2025
திருவாரூர் அர.திருவிடம் காலமானார்

திக – திமுகவினரால் பெரிதும் போற்றப்படும் திருவாரூர் அர.திருவிடம் காலமானார். பெரியாரின் தொண்டன், கருணாநிதி, ஸ்டாலினின் ஆதரவாளரான அவர், தேர்தல் நேரத்தில் திமுக வெற்றிக்காக தீவிர பரப்புரை மேற்கொண்டவர். ‘கலைஞரின் காலடிச் சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் அவரின் ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ நூலை உதயநிதி வெளியிட்டிருந்தார்.
News August 16, 2025
யார் இந்த ஐ.பெரியசாமி?

‘MGR-ஐ வத்தலகுண்டுக்குள் வரவிட மாட்டேன்’ என 1973-ல் கூறி கவனம்பெற்று, திமுக ஒன்றிய தலைவரானவர் ஐ.பெரியசாமி. ஆத்தூர் MLA-வாக 1989-ல் முதல்முறையாக சட்டப்பேரவையில் நுழைந்தவர், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றார். 1996-ல் முதல்முறையாக அமைச்சராகப் பதவியேற்ற அவர், 2009 வரை மு.க.அழகிரியுடன் நெருக்கம் காட்டினார். அதன்பிறகு, தற்போது வரை ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக வலம் வருகிறார்.