News August 6, 2025

கேரள மக்களுக்கு வயநாடு போல் மீண்டும் அதிர்ச்சி

image

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேக வெடிப்புக்கு பிறகு கேரளாவை சேர்ந்த 28 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் மாயமானது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவின் சோகத்திலிருந்தே 298 பேரின் குடும்பத்தினர் மீளாத நிலையில், தற்போது 28 பேர் மீண்டும் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. 28 பேரும் மீண்டு வர இறைவனை வேண்டுவோம்.

Similar News

News April 8, 2026

தவெகவுடன் கூட்டணி.. கடைசி நேரத்தில் பரபரப்பு

image

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க ராகுல் காந்தி விரும்பியதாக ஆதவ் ஆர்ஜுனா முக்கிய தகவலை கூறியுள்ளார். ஆனால், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் டெல்லி சென்று இந்த கூட்டணி அமையவிடாமல் தடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் உடன் கூட்டணி அமையாவிட்டாலும், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு கிடைத்துவிடும் என்றும் ஆதவ் பேசியுள்ளார். இதுபற்றி உங்க கருத்து?

News April 8, 2026

இந்தியர்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தல்

image

ஈரானில் அதிகரித்து வரும் போர் பதற்றம், பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. எந்தவித ஆலோசனையும் இன்றி சர்வதேச எல்லைகளுக்கு செல்லக்கூடாது என்றும், உதவிக்கு இந்த எண்களை +989128109115, +989128109109 +989128109102, +989932179359 தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 8, 2026

GPay-யில் இதை கவனிச்சீங்களா?

image

G-Pay-யின் UPI Circle, புதிய வசதியை கொடுக்கிறது. இதற்கு Primary Payer ஆக வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நீங்கள் இருப்பீர்கள். Secondary Payer ஆக நீங்கள் சேர்க்க விரும்பும் நபருடன் இணையலாம். அவருக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து செலவு செய்யலாம். அதற்கான லிமிட் & அனுமதியை Auto-approval மூலம் நீங்கள் கொடுத்தால், உங்கள் பணத்தை அவர்கள் செலவழிக்கலாம்.

error: Content is protected !!