News September 5, 2025
ஆப்கனில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அழுகுரல்களுக்கு இடையே மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில், 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.2 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது டெல்லி, ஜம்மு & காஷ்மீர் வரை உணரப்பட்டுள்ளது. இருப்பினும், இதில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Similar News
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என தவெக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சிக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்துள்ளது. ஊழலற்ற ஆட்சியை விஜய்யால் மட்டுமே கொடுக்க முடியும் என மனதார நம்புவதாக அக்கட்சியின் மாநில தலைவர் நாகூர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 234 தொகுதிகளிலும் தவெகவின் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 19, 2026
அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ள ஏ.சி. சண்முகம்

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகத்துடன் EPS பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி.சண்முகம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், பாஜகவுடன் பேசிவிட்டு முடிவை தெரிவிப்பதாக EPS கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த முறை NDA கூட்டணியில் அவர் ஒரு தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.