News November 16, 2024
ரயில்வே சொன்ன வேற லெவல் குட் நியூஸ்..!

ரயிலில் அவசரமாக டிக்கெட் புக் செய்ய தட்கலை மட்டுமே பலரும் அறிந்திருப்போம். இந்நிலையில், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக் செய்யும் ‘கரண்ட் புக்கிங்’ (Current Ticket Booking) என்ற வசதி இருப்பது பலருக்கும் தெரியாது. இதற்கு IRCTC செயலியில் சென்று, ஏறும் இடம், இறங்கும் இடத்தை பதிவிட்டு புக் செய்யலாம். சாதாரண டிக்கெட் கட்டணத்தை காட்டிலும், இது குறைவுதான்.
Similar News
News March 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 8, மாசி 24 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 8, 2026
இரண்டு நாளில் கூட்டணி உறுதியாகும்: வீரபாண்டியன்

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – சிபிஐ இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மார்ச் 8,9-ம் தேதிக்குள் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் என்றார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை என்றும், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும் எனவும் தெரிவித்தார்.
News March 8, 2026
டி20 WC நிறைவு விழாவில் சர்வதேச பாப் பாடகர்!

அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானம் டி20 WC பைனலுக்கு தயார் நிலையில் உள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற இருக்கும் நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதன்படி 2 முறை கிராமி விருது வென்ற சர்வதேச பாப் நட்சத்திரம் ரிக்கி மார்ட்டினின் கச்சேரி நடைபெற உள்ளது. அவருடன் இந்தியாவின் பாப் பாடகர் சுக்பீர் மற்றும் புகழ்பெற்ற பாடகி ஃபால்குனி பதக்கும் இசையால் அரங்கில் தீ பற்ற வைக்க உள்ளனர்.


