News May 2, 2024
மேலும் ஒரு கல்குவாரி உரிமையாளர் கைது

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். கல் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே, சேதுராமன் என்பவர் கைதான நிலையில், தற்போது தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கல்குவாரியால் பல சிக்கல்களை சந்திப்பதால் அதனை மூட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Similar News
News March 11, 2026
யாருடன் கூட்டணி? கிருஷ்ணசாமி முக்கிய முடிவு!

முக்கிய கட்சிகளில் புதிய தமிழகம் மட்டுமே இன்னும் தனது கூட்டணி முடிவை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணசாமியிடம் திமுக, பாஜக, தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக ஆட்சியில் பங்கு விவகாரத்தை அதிகம் பேசி வரும் கிருஷ்ணசாமி, தவெகவுக்கு செல்ல உள்ளதாகவும் பேச்சு எழுந்தது. இதனிடையே, கோவையில் உள்ள தனது கட்சி அலுவலகமான பொதிகை இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
News March 11, 2026
தமிழ் வில்லன் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த இவர், கமல் நடித்த சூரசம்ஹாரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அவரது மறைவிற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதி சடங்குகள் இன்று பெங்களூரிலேயே நடைபெறவுள்ளன.
News March 11, 2026
முடிவை மாற்றினார் OPS

ராமநாதபுரம் MP நவாஸ் கனிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, OPS சென்னை HC-யில் OPS மனு தாக்கல் செய்துள்ளார். 2024-ல் NDA சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த OPS, நவாஸ் கனியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் 2 முறை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்த OPS, தற்போது திமுகவில் இணைந்ததால் அவ்வழக்கை வாபஸ் பெறுகிறார்.


