News September 4, 2025
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. பயத்தில் மக்கள்

ஆப்கானிஸ்தானில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவாகியுள்ளது. நிலப்பரப்புக்கு கீழ் 135 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,400க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். இன்றைய நிலநடுக்கத்தால் புதிய உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றாலும் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.
Similar News
News September 7, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 451 ▶குறள்: சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். ▶ பொருள்: தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.
News September 7, 2025
USA உடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம்: ஜெய்சங்கர்

இந்தியாவுக்கு, USA 50% வரி விதித்ததில் இருந்தே இரு நாடுகளிடையே வர்த்தக ரீதியிலான கருத்துகள் வலுத்து வருகிறது. இந்நிலையில், USA உடனான நல்லுறவுக்கு PM மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக EAM ஜெய்சங்கர் கூறியுள்ளார். ட்ரம்ப் விஷயத்தில், மோடி எப்போதும் மிகச்சிறந்த தனிப்பட்ட நல்லுறவை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன் என்று டிரம்ப் பேசியிருந்தார்.
News September 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 7, ஆவணி 22 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 8:30 AM – 9:00 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பவுர்ணமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை