News April 11, 2025
பெயர் தெரியாத கோழைகளே..த்ரிஷா கோபம்!

த்ரிஷாவின் சமீபத்திய போஸ்ட் பயங்கர வைரலாகி வருகிறது. அதில், ‘ஷப்பா.. சோஷியல் மீடியாவில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்களைப் பற்றிய முட்டாள்தனமான விஷயங்களை பதிவிடும் நபர்களே, நீங்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறீர்கள்? நன்றாக தூங்குகிறீர்கள்? பெயர் தெரியாத கோழைகளே.. God bless u’ எனப் பதிவிட்டுள்ளார். எதற்காக இந்த பதிவு என புரியவில்லை. என்னவா இருக்கும்?
Similar News
News December 7, 2025
அறிவாலயம் சுடுகாடு மாதிரி: நாஞ்சில் சம்பத்

திமுகவை விட தவெகவின் தேர்தல் பணிகள் சிறப்பாக இருப்பதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். மேலும், தவெக அலுவலகம் பிரமாதமாக உள்ளதாக கூறிய அவர், ஆனால், அறிவாலயம் சுடுகாடு மாதிரி இருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தவெக அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் லேப்டாப் வைத்து தேர்தலுக்கான பணியை செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக குறைந்தது

கனமழை காரணமாக கடந்த வாரம் முதல் தொடர்ந்து காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ₹10 முதல் ₹20 வரை குறைந்துள்ளது. ₹70-க்கு விற்பனையான தக்காளி ₹40-க்கும், வெங்காயம் ₹20-க்கும், உருளைக்கிழக்கு ₹40-க்கும், குடைமிளகாய் ₹40-க்கும், பாகற்காய் ₹35-க்கும், கேரட் ₹50-க்கும், முள்ளங்கி ₹25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.
News December 7, 2025
விண்வெளியில் கூட வாழும் உயிரி தெரியுமா?

இயற்கை அதிசயங்களில் ஒன்றான மிகச்சிறிய உயிரியான டார்டிகிரேட் (நீர் கரடி), 8 காலுடன், 1 மி.மீ.-க்கும் குறைவானவை. கடும் குளிரில், வெப்பத்தில், அணுக்கதிர்வீச்சில், ஏன் விண்வெளியில் கூட உயிர் இவை உயிர்வாழும். நீர் இல்லாதபோது, உடல் செயல்பாட்டை நிறுத்தி, பல ஆண்டுகள் காத்திருந்து, நீர் கிடைக்கும்போது புத்துயிர் பெறும். 2007-ல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இவை, 10 நாள்களுக்கு பின் பூமிக்கு வந்து உயிர்பெற்றது.


