News August 26, 2025
வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லிட்டீங்களா ?

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் நண்பர்களுக்கு வாழ்த்துகளை அனுப்பி மகிழுங்கள்.
➤ அனைவரது வாழ்விலும் இன்னல் நீங்கி, சுபிட்சம் பெருகி, வளமான எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
➤ கேட்டதை கொடுக்கும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால் நலமும் வளமும் பெற்று வாழ நல்வாழ்த்துகள்.
➤ தடைகளை தகர்க்கும் விநாயகரை கொண்டாடும் சொந்தங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.
News August 26, 2025
ஆடை இல்லாமல் 11 நாள்கள் சுற்றுலா

உலகின் நீளமான நிர்வாண படகு சுற்றுலா அமெரிக்காவின் மியாமியில் இருந்து கரீபியன் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப். 9- 20 வரை செல்லும் இந்த சுற்றுலாவின் சிறப்பே ஆணும் பெண்ணும் ஆடைக்கு லீவு கொடுப்பதுதான். உடலை அப்படியே ஏற்று கொள்ளும் உணர்வை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாம். பயணக் கட்டணம் ஒருவருக்கு ₹43 லட்சம். 1990 முதல் Bare Necessities உள்ளாடை நிறுவனம் இதனை செய்து செய்கிறது.
News August 26, 2025
கோலிக்கு சளைத்தவர் இல்லை புஜாரா: அஸ்வின்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி, ரோஹித்துக்கு கிடைத்த புகழ் வெளிச்சம் புஜாராவிற்கு கிடைக்கவில்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார். புஜாராவின் பங்களிப்புகள் கோலி, ரோஹித்தை விட குறைவானவை இல்லை எனவும், டெஸ்ட்டில் கோலி அதிக ரன்கள் எடுக்க புஜாரா ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்களுடன் 7195 ரன்கள் எடுத்த புஜாரா சமீபத்தில் ஓய்வை அறிவித்தார்.