News October 31, 2025

சற்றுநேரத்தில் மொத்த நாடும் திரும்பி பார்க்கும் அறிவிப்பு

image

தற்போதைய அரசியல் சூழலில், அனைத்து மாநிலங்களும் பிஹார் தேர்தலை உன்னிப்பாக கவனிக்கின்றன. இந்நிலையில், NDA கூட்டணி, இன்று காலை 9.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இதில், மகளிர், இளைஞர்கள், மாணவர்களை கவரும் வகையிலும் பல அறிவிப்புகள் இடம்பெறலாம் என தெரிகிறது. தமிழகத்திலும் விரைவில் தேர்தல் வரவுள்ளதால், திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளும் இத்தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

Similar News

News October 31, 2025

டிரம்ப்புக்கு ஆப்பு வைத்த சொந்த கட்சியினர்

image

பிற நாடுகள் மீது டிரம்ப் விதிக்கும் வரிகளுக்கு எதிராக 3வது முறையாக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் டிரம்ப்பின் சொந்த கட்சியினர்(குடியரசு கட்சி) 4 பேர் அவருக்கு எதிராக வாக்களித்திருப்பதுதான் ஹைலைட். ஆனால் எந்த தீர்மானத்தையும் நிராகரிக்கும் Veto அதிகாரம் அதிபரிடம் இருக்கிறது. இதனால் டிரம்ப் இதனை நிராகரிப்பார், இது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தாது என கூறப்படுகிறது.

News October 31, 2025

2-வது T20: இந்திய அணி பேட்டிங்

image

மெல்பர்னில் நடக்கும் 2-வது T20-யில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, பும்ரா. வெல்லுமா இந்த படை?

News October 31, 2025

TN-ல் மீண்டும் Ford: ₹3,250 கோடிக்கு ஒப்பந்தம்

image

கடந்த 2022-ல், ஏற்றுமதி சரிந்ததால் Ford நிறுவனம், TN-ல் செயல்பட்டு வந்த தனது ஆலையை மூடியது. இந்நிலையில், சமீபத்தில் CM ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, TN-ல் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க Ford நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று TN-ல் மீண்டும் தனது கார் உற்பத்தியை தொடங்குகிறது Ford. ₹3,250 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், தலைமைச் செயலகத்தில் CM முன்னிலையில் கையெழுத்தானது.

error: Content is protected !!