News March 19, 2024
ஓரிரு நாளில் காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது அவர்களின் விருப்பம் என்று கூறிய அவர், மூழ்குகிற கப்பலில் அவர்கள் ஏறியுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும், நிவாரணத்தை பிச்சை எனக் கூறி தமிழக மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
மயிலாடுதுறை: TN-ALERT செயலி ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய மழை, புயல், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
News November 21, 2025
இன்று முதல் அமலுக்கு வந்தது… 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்

மத்திய அரசு உருவாக்கியுள்ள 4 தொழிலாளர் நலச் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளன. தற்போதுள்ள பணிச்சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப, ஏற்கெனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டு ஊதியச் சட்டம்(2019), தொழில் உறவுகள் சட்டம்(2020), சமூக பாதுகாப்பு சட்டம்(2020), பணியிட பாதுகாப்பு, உடல்நலம் & பணிச்சூழல் சட்டம்(2020) ஆகிய நான்கு சட்ட தொகுப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
News November 21, 2025
உதடு வெடிப்பை தடுக்க உதவும் வழிகள்

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, நமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், சாப்பிடுவது கூட கஷ்டமாக இருக்கும். அதை எதிர்கொள்ள, எளிமையான வழிகள் உள்ளன. அவை என்னென்ன வழிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


