News March 21, 2024
தமாகா போட்டியிடும் 3 தொகுதிகள் அறிவிப்பு

பாஜக கூட்டணியில் தமாகா போட்டியிடும் மூன்று தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தஞ்சை, மயிலாடுதுறை, ஈரோடு தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட உள்ளது. தமாகா தலைவர் ஜி.கே.வாசனின் சமூக வாக்குகள் ஈரோடு தொகுதியை தவிர்த்து மற்ற இரண்டு தொகுதிகளிலும் அதிகம் என்பதால் இந்த தொகுதிகளை அக்கட்சி போராடி பெற்றுள்ளது. நாளைக்குள் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
Similar News
News December 14, 2025
காஸாவை மிரட்டும் வானிலை: 3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி

இஸ்ரேலுடனான போரில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள காஸா மக்கள், தற்போது கொடூரமான வானிலையின் பிடியில் சிக்கியுள்ளனர். கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழை, வெள்ளத்தில் சிக்கி, 3 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ளனர். இதில், 8 மாத குழந்தை குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளது. இஸ்ரேல் முற்றுகையால் அத்தியாவசிய பொருள்கள் வருவது தடுக்கப்படுவதும் இந்த துயரத்திற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
News December 14, 2025
₹56,000 வரை சம்பளம்.. அப்ளை பண்ண இன்றே கடைசி

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 362 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் 18-25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முதல்நிலை, மெயின்ஸ் ( Tier 1, Tier 2) என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். இப்பணிக்கு குறைந்தபட்சமாக ₹18,000 முதல் அதிகபட்சமாக ₹56,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு <
News December 14, 2025
நிதிஷ் குமாருக்கு கூடுதல் அதிகாரம்!

பிஹாரில் புதிதாக உருவாக்கப்பட்ட 3 துறைகளில் விமான போக்குவரத்து துறையை CM நிதிஷ்குமார் தனது வசமாக்கியுள்ளார். இளைஞர் நலன் & வேலைவாய்ப்பு, உயர் கல்வி மற்றும் விமான போக்குவரத்து ஆகிய 3 துறைகள் உருவாக்க கடந்த 9-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 20 ஆண்டுகளாக தனது வசம் இருந்த உள்துறையை நிதிஷ் இழந்த நிலையில், அவரை கூல் செய்ய விமான போக்குவரத்து துறையை பாஜக விட்டுக்கொடுத்ததா என RJD சாடி வருகிறது.


