News August 30, 2025

மத்திய அரசில் 1,543 பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் Power Grid Corporation of India நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,265 கள பொறியாளர், 278 கள மேற்பார்வையாளர் என மொத்தம் 1,543 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. B.E., B.Tech., கல்வித் தகுதியுடன் 1 வருட பணி அனுபவம் வேண்டும். வயது வரம்பு: 18 – 29. சம்பளம்: ₹23,000 – ₹1.20 லட்சம். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.17. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it

Similar News

News August 30, 2025

BREAKING: ஆயுதபூஜை விடுமுறை.. ஸ்பெஷல் அறிவிப்பு

image

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, நாடு முழுவதும் 150 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 21 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக தென் மத்திய ரயில்வேயில் 48 ரயில்களும், குறைந்த பட்சமாக தெற்கு ரயில்வேயில் 10 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. சென்னை, மதுரை, கோவை வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

News August 30, 2025

சசிகாந்த் செந்தில் MP ஹாஸ்பிடலில் அனுமதி

image

காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் MP சசிகாந்த் செந்தில் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூரில் அவர் நேற்று முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததால் திருவள்ளூர் அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 30, 2025

நயன்தாராவுடன் இருப்பது யார் தெரியுமா?

image

நடிகை நயன்தாராவிற்கு உடன்பிறந்த அண்ணன் இருப்பது தெரியுமா? ஆம், கேரளாவின் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன், இவரது அண்ணன் பெயர் லெனோ குரியன். துபாயில் தொழில் செய்து வரும் லெனோ, சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!