News October 1, 2025
மீண்டும் ஓடிடியில் அன்னபூரணி

2023-ல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ படம் சர்ச்சையில் சிக்கியது. இதனையடுத்து, அப்படம் Netflix ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், JioHotstar ஓடிடி தளத்தில் இப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2024, ஆக.9-ல் Simply South ஓடிடி தளத்தில் இந்தியாவை தவிர பிற நாடுகளில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 1, 2025
அக்டோபர் 1: வரலாற்றில் இன்று

*அனைத்துலக முதியோர் நாள்.
*உலக சைவ உணவு நாள்.
*1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
*1847 – அன்னி பெசன்ட் பிறந்தநாள்.
*1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
*1927 – நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்.
*1953 – சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.
*2006 – ‘பாண்டிச்சேரி’ பெயர் ‘புதுச்சேரி’ என மாற்றப்பட்டது.
News October 1, 2025
இந்து அல்லாதோர் கோயில் முன்பு.. பாஜக Ex MP சர்ச்சை

இந்துக்கள் அல்லாதவர்கள் கோயில் பிரசாதம் விற்றால், அவர்களை அடித்து நொறுக்குங்கள் என பாஜக முன்னாள் MP பிரக்யா தாகூர் சர்ச்சையாக தெரிவித்துள்ளார். போபாலில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் நவராத்திரி விழாவில் பேசிய அவர், இந்து அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள் என கூறினார். மேலும், பிற மடத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாடம் கற்பிக்க வீட்டிலேயே ஆயுதங்களை வைத்திருங்கள் என்றார்.
News October 1, 2025
MARRIAGE பண்ண எது சரியான வயசு தெரியுமா?

*ஆண்/பெண் 1- 4 வயது இடைவெளி: ஏறக்குறைய ஒரே வயது என்பதால் இருவருக்குள் உச்சக்கட்ட ஈகோ நிலவும். அதிகம் டைவர்ஸ் ஆகும் தம்பதியர் இவர்களே. *4-7 வயது: வித்தியாசம் அதிகம் என்பதால், வருமானம், மெச்சூரிட்டி என லைப் சற்று எளிதாக இருக்கும். *8-10 வயது: சண்டை, சச்சரவு குறைவு, குழந்தை வளர்ப்பில் புரிதல் அதிகம். ஆனால், இந்த age gap-ஐ தற்போது விரும்புவதில்லை. வயதைவிட புரிதலே முக்கியம் என்கின்றனர். உங்க கருத்து?