News April 5, 2025

அண்ணாமலையின் அடுத்த திட்டம்?

image

பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லை என அண்ணாமலை கூறிய பிறகு, அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மத்தியில் இணையமைச்சர் பதவி வழங்கத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், நான் டெல்லி செல்ல மாட்டேன் தமிழகத்திலேயே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே மோடி நாளை தமிழகம் வந்து சென்றபிறகு ரஜினி பாணியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்ல உள்ளாராம்.

Similar News

News April 5, 2025

சொந்த மண்ணில் போட்டியிடும் இடும்பாவனம் கார்த்திக்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் நாதக சார்பில் இடும்பாவனம் கார்த்திக் போட்டியிடுவார் என்று சீமான் அறிவித்துள்ளார். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி கணக்குகளை தொடங்கி இருக்கும் நிலையில், தனித்து களம் காணும் முடிவோடு சீமான் அடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். இதுவரை தேர்தலில் போட்டியிடாத இடும்பாவனம் கார்த்திக், தனது சொந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

News April 5, 2025

மீனவர்களை விடுவிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

image

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மீனவர் விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் அணுக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ‘செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு‘ என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டினார்.

News April 5, 2025

மனம் மாறுவாரா டிரம்ப்? ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்ப்பு!

image

அமெரிக்கா விதித்த 26% வரி விதிப்பு இந்திய ஏற்றுமதியாளர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. தவிர 10% அடிப்படை வரியும் அவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. புதிய வரி விதிப்பு அடுத்த வாரம் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் இந்திய, அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளனர். அதற்கேற்றபடி, அதிபர் டிரம்பும் இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு பேச்சுவார்த்தையை தீவிரமாக்கியுள்ளார்.

error: Content is protected !!