News June 5, 2024
அண்ணாமலைக்கு தண்டனை கிடைக்கும்: எஸ்.வி.சேகர்

அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் நடவடிக்கையால் 13 இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் பறிபோனதாக குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலைக்கு அதற்கான தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் பாஜகவின் 14% வாக்கு என்பது வளர்ச்சி அல்ல என்றும், அது அசிங்கமானது எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
RO-KO விவகாரம்.. கம்பீர், அகர்கரை சாடிய ஹர்பஜன்

RO-KO மற்றும் கம்பீர், அகர்கர் இடையே உறவு மோசமாகி வரும் நிலையில், ஹர்பஜன் சிங் கூறிய கருத்து பேசுபொருளாகியுள்ளது. தங்களது கிரிக்கெட் கரியரில் போதிய சாதனைகளை படைக்காத தலைமை பொறுப்பில் இருப்பவர்கள், பல சாதனைகளை படைத்துள்ள RO-KOவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தான் உள்பட கடந்த காலங்களில் பல வீரர்களும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
புயல் அலர்ட் 20 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர், கோவை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கை, சேலம், நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் IMD கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது.
News December 4, 2025
மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.


