News April 11, 2025
‘டல்’ அடித்த அண்ணாமலை

TN பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தபோது, அண்ணாமலை, எல்.முருகன், வானதி, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோரும் உடனிருந்தார். இதில் எல்.முருகன், வானதி, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. வானதி ஆரம்பம் முதலே சிரித்த முகமாக இருந்தார். அண்ணாமலையின் முகம் மட்டும் டல்லாக இருந்தது. செய்தியாளர்களிடமும் பேசவில்லை.
Similar News
News December 10, 2025
டிரம்ப்பை சீண்டியதால் இந்தியா மீது வரி: ரகுராம்

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் காரணமில்லை என்று கூறியதே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரிவிதிக்க காரணம் என RBI EX கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கூற்று டிரம்ப்பின் ஈகோவை சீண்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டது. டிரம்ப்பால் தான் போர் நின்றது என்று துதிபாடியதால், அமெரிக்கா 16% வரியோடு நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் ஆனது எப்படி?

இந்திய குடியுரிமையை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சோனியா காந்திக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1983-ல் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், 1980-ல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக விகாஷ் திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக, டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News December 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 545 ▶குறள்: இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.


