News March 28, 2025

விஜய் கட்சிக்கு புதுப்பெயர் வைத்த அண்ணாமலை!

image

தவெக கூட்டத்தில் மோடியை விஜய் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் என்பது சும்மா மைக் எடுத்து பேசிவிட்டு போவது அல்ல எனக் கூறிய அவர், முதலில் விஜய் களத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஊடக வெளிச்சத்துக்காக மோடியை விஜய் விமர்சிப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, ஆதவ் அர்ஜுனாவை சேர்த்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகம், தமிழக லாட்டரி கழகமாக மாறிவிட்டது என விமர்சித்தார்.

Similar News

News October 20, 2025

குழந்தைகள் திக்குறாங்களா? சரி செய்ய Easy Tips

image

திக்குவாயை சரி செய்ய டாக்டரை அணுகுவது அவசியம் என்றாலும், இதற்கு சில பயிற்சிகளும் இருக்கிறது. ➤எழுத்துக்களை தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி பழக வேண்டும் ➤மூச்சு பயிற்சி செய்வது உதவலாம் ➤வாக்கியங்களை வேகமாக படிக்கலாம் ➤பாடல்கள் பாடுவதும் உதவும். குழந்தைகளின் எதிர்காலத்தை காக்கும் இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணலாமே!

News October 20, 2025

ஜனாதிபதியுடன் PM மோடி சந்திப்பு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவை PM மோடி சந்தித்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருவரும் பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனையும் PM மோடி சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.

News October 20, 2025

சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, காலாண்டு தேர்வில் குறைந்த மார்க் எடுத்த 10, +12-ம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளிநேரம் முடிந்த பிறகு, சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறைக்குபின் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!