News April 7, 2024
அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்தது இதுக்குதான்

ரவுடிகளுக்கு பொறுப்பு கொடுக்கவே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்துள்ளதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘பாஜக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக படுத்தால் தூக்கம் வரவில்லை. அதனால் தான் திமுகவை ஆதரித்து தேர்தலில் பரப்புரை செய்து வருகிறேன். பணம், பதவி உள்ளிட்டவற்றை தருவதாகக் கூறி பாஜகவில் சேர, அழைத்த போதும் தான் செல்லவில்லை’ என்றார்.
Similar News
News January 13, 2026
வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட்

விஜய்யின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. ஏமாந்த ரசிகர்களை கொஞ்சம் தேற்றுவோம் என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர் தாணு ‘தெறி’ படத்தை வரும் 15-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார். ஆனால், இந்த படமும் தற்போது தள்ளிப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வெந்த புண்ணுல வேல பாய்ச்சுன மொமண்ட் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
News January 13, 2026
பொங்கல்: மல்லிகைப்பூ விலை ₹6,000 குறைந்தது

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த சில நாள்களாக மல்லிகைப்பூ விலை தங்கத்திற்கு இணையாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 1 கிலோ ₹12,000 வரை விற்பனையானது. இந்நிலையில், இன்று மதுரை, தோவாளையில் 1 கிலோ மல்லிகைப்பூ ₹4,000-₹6,000 வரை விற்பனையாகிறது. ஆனால், இதுவும் பெரிய விலை என மக்கள் புலம்புகின்றனர். 1 கிலோ முல்லை ₹2,500, பிச்சிப்பூ ₹2,000, கனகாம்பரம் ₹2,000, சம்பங்கி ₹150-க்கு விற்பனையாகிறது.
News January 13, 2026
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல: டிரம்புக்கு பதிலடி

கிரீன்லாந்தை எப்படியாவது <<18833302>>வாங்கிவிடுவேன்<<>> என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார் டிரம்ப். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்த டென்மார்க் MEP ஆண்டர்ஸ் விஸ்டிசன், கிரீன்லாந்து 800 ஆண்டுகளாக டென்மார்க்கின் முக்கிய அங்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே, கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற அவர், மேடையிலேயே டிரம்ப்பை “F**k off” என அசிங்கமாகவும் திட்டியுள்ளார்.


